அறிய வழி தெரியவில்லையே
அறிய வழி தெரியவில்லையே
மரங்களின் அசைவினால் காற்றினை அறிந்தோம்
பகலவனின் கிரணங்களால் பகலினை அறிந்தோம்
நிழல்களின் நீளத்தினால் நேரத்தை அறிந்தோம்
பூக்களின் வாசத்தினால் பொழுதினை அறிந்தோம்
பறவைகள் ஒலிகளினால் பகல் இரவை அறிந்தோம்
உணர்ச்சிகள் சேர்க்கையினால் உறவுகளை அறிந்தோம்
கனிவான மொழியினால் அன்பினை அறிந்தோம்
உணவு சுவைத்ததினால் பசியை அறிந்தோம்
வாய்விட்டு சிரித்ததினால் மகிழ்ச்சியை அறிந்தோம்
கண்கள் கலங்கினதினால் துயரத்தை அறிந்தோம்
உயரிய செயல்களினால் மனிதர்களை அறிந்தோம்
பேசும் தன்மையினால் நோக்கங்களை அறிந்தோம்
எங்கும் நிறை இறைவன் அருளால் எல்லாம் அறிந்தும்
உடலிருந்து உயிர் பிரியும் நேரம் மட்டும் அறிய வழி தெரியவில்லையே !!