உதவாக் கரை

வெண்பா

வித்வான் தமிழறிந்த வித்தகன் இல்லையாம்
அத்தனை மானம் பறக்கவிட்ட. --- பித்தன்
புலவன் புலம்புகிறான் இத்தமிழ் விட்டு
பலவாய் பெரியார் என

கவியாம் பெரியார் கவிபாடக் கற்றான்
தவிப்பாய் தமிழ்வுயர்த்த. வென்று --- கவியாம்
பகுத்தறிவு பாடம் புகுத்துகிறார் மண்டை
வகுத்துசா ணைப்பிடிக்கத் தான்

புலவர் எவரும் கலைவாணிப் பாடார்
கலகமாய்தெய் வத்தைநிந் திப்பார் --- பிலகாபோல்
வாய்திறந்து பொய்யாய் அரசொழிக வென்பாரே
மெய்தான் உதவாக் கரை

எழுதியவர் : பழனி ராஜன் (8-Nov-19, 10:03 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1034

மேலே