மறக்கமுடியுமா

தெளிவில்லாக் கும்பல் தெளிதமிழர் என்றால்
களிக்கமுடி யாவென்செய் வேன்நான்--- தெளியும்நம்
வள்ளி மணாளன்பேர் சொல்லிநீரை நெற்றியில்
அள்ளிப்பூ சப்பகையில் லை

தெய்வப்பா தையேன் மறந்தாய் தெளிதமிழா
தெய்வம் தொழலும் அடிமையாமோ -- தெய்வம்
பலவாய் உலகில் தொழுதிட்டார் நீயோ
கலைத்தாயைக் கூடமறந் தாய்

எதில்நீத் தெளிந்தாய் எதில்சாதித் தாய்சொல்
பதிலை உளருமுண்மத் தாசொல் --- பதிலை
தமிழிலெதைச் செய்தாய் தமிழா மறந்தாய்
தமிழ்க்கடவுள் மொத்தமும் நீ.

பாதைபோட்டா னென்கிறாய் பாட்டைப்போட் டானாம்யார்?
பாதையெங்கும் முள்பரப்பி யக்கள்வன் -- காதை
தமிழைமட்டு மல்லத் தமிழரையும் சேர்த்துத்
தமிழின் தலைவனொழிப் பான்

தெய்வம் தமிழிரண்டும் தெற்கில் இருகண்ணாம்
பைத்தியமாய் சேர்ந்து அழித்தார்நம் --- பக்தி
உடனுடன் பக்தி அழித்தார் படையால்
தடைசெய்வோம் அத்துமீற லை

எழுதியவர் : பழனி ராஜன் (10-Nov-19, 2:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 117

மேலே