சிட்டுக்குருவிகள்

சிற்றகவை வயதினிலே சிறகடித்து நீ பறக்க
சிரம் தூக்கிச் சிரித்திருந்தேன், உன்
சிறகுகள் போலத் துளிர்த்திருந்தேன்...!

துள்ளித் திரிந்த உனையே
அள்ளித் தின்றது அலைபேசிகள், இன்று
வெள்ளிச் சின்னமென கடிகாரக் கூண்டிலில்
கள்ளிக்கு மேலமர்ந்த காட்சிப் பொருளாய்...!

மானிய விலையில் தானியங்கள் இங்குண்டு
ஏனெங்கே பறவையென ஏக்கமிங்கே எவருக்குண்டு...?

கெட்டுப் போனாலும் எவர் வெட்டிச் சாய்ந்தாலும்
பட்டுப் போகாமல் எமை தொட்டு ஆடிட வா...!

மெட்டுகளால் வட்டமடித்து
கட்டுண்டுக் கிடக்கும் நிலைமாறி,
வெட்டுண்டு தடைகளைத் தகர்த்து
மொட்டெனவே மலர்ந்துவா சிட்டுக்குருவிகளே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (12-Nov-19, 10:10 am)
Tanglish : sittukuruvikal
பார்வை : 41

மேலே