அழகினை அறிவோம்

அழகினை அறிவோம்


மயிலின் அழகு தோகையிலே
குயிலின் அழகு குரல்தனிலே
பொன்னின் அழகு நகையினிலே
பெண்ணின் அழகு புன்னகையிலே

செயலின் அழகு நேர்த்தியிலே
நேர்த்தியின் அழகு முழுமையிலே
நேர்மையின் அழகு வாய்மையிலே
வாய்மையின் அழகு உள்ளத்திலே

உள்ளத்தின் அழகு நல்லெண்ணத்திலே
நல்லெண்ணத்தின் அழகு பண்பினிலே
பண்பின் அழகு படிப்பினிலே
படிப்பின் அழகு கல்வியிலே

கல்வியின் அழகு மொழியினிலே
மொழியின் அழகு சொற்களிலே
சொற்களின் அழகு இனிமையிலே
இனிய சொற்களை பெருக்குவோம்
சுடு சொற்களை தவிர்ப்போம்
அழகின் புது அர்த்தத்தை அறிவோம்

எழுதியவர் : கே என் ராம் (16-Nov-19, 7:03 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : azhaginai arivom
பார்வை : 73

மேலே