சிந்தனைத் துளிகள்

1. நற்பெயரென்னும் நல்லறம் கூட்டி,
சிந்தையைக் கெடுக்கும் தீமையைக் கழித்து,
அறம் பொருளென்ற பேற்றினைப் பெருக்கி,
இல்லறம் வகுத்தே இனிமையாய் வாழ்வோம்!

2. இருளை விரட்டுவோம் ஒளிவெள்ளத்தில் மூழ்குவோம்
சத்தியப் பாதையைப் பின்பற்றி நித்தியம் வீறுநடை பயில்வோம்!

3. வாழ்க்கை என்றதோர் நெடும்பயணத்தில்
வருவோர் போவோர் ப்லருண்டு
வாழ்ந்து மடிந்தோர் எண்ணற்றோர்
வாழ்வோர் சிலராங்கே என்றென்றும்!

4. இருளும் ஒளியும் நிறைந்த இப்புவியில்
இன்பமும் துன்பமும் கலந்திட்ட வாழ்வில்
நல்வினைத் தீவினைப் பயனறிந்தே நாம்
நற்பணியியற்றியே நற்பேரடைவோம்

5. உழைப்பால் உயர்வோம், உழைக்கச் செய்வோம்,
உழைப்பின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றுவோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


சிந்தனைத் துளிகள் தொடரும்.......

அன்புடன் ஸ்ரீ.விஜயலஷ்மி

எழுதியவர் : ஸ்ரீ. விஜயலஷ்மி (1-Aug-22, 5:28 pm)
பார்வை : 83

மேலே