கை விட்டு விடும்
கொற்றவனை விட
கற்றவனே மேல் என
அறிந்தவர்கள் பாரத மக்கள்
அதனால் படித்தவரெல்லாம்
அயல் நாடு சென்றார்கள்
அகிலம் போற்ற வாழ்கிறார்கள்
தன் வாழ்வு சிறக்க
தான் கற்ற அறிவை
அந்நிய நாட்டில் விற்று
ஆனந்தமாக வாழ்ந்தாலும்
அறிவு உருமாறி பொருளாகி
இந்தியா வரும்போது
விலைவாசி உயர்வால
இந்திய மக்களுக்கு
அந்த பொருள் எட்டாத
கனி தானே !
ஏழை மக்களும் பயனடைய
வழி காட்ட வேண்டாமா ?
பயனுள்ள பொருட்களை
பாமர மக்களும் வாங்கி பயனுற
புதிய வழி கண்டால்
கற்றறிவு பயனுறும் –இல்லையேல்
கற்றறிவே ஏழைகளை
கை விட்டு விடும்