மண்ணில் சிதைந்து கிடக்கும்

மண்ணில் சிதைந்து கிடக்கும்


அதிகாரம் எழும்போது
ஆணவம் தலை தூக்கும்
சொந்தங்களும், பந்தங்களும்
சொல்லாமல் விலகும்

அதிகாரம் நழுவும் போது
அகம் அமைதி இழக்கும்
உற்ற நண்பர்களும்
ஒதுங்கி விடுவார்கள்

நச்சுப் பாம்பின் பிளந்த
நாக்கைப் போல
ஆணவமும், அதிகாரமும்
விஷமாகி அனைத்தும் அழியும்

நியாயங்களும், நேர்மைகளும்
நிலைகுலைந்து
முற்றாக அழிந்து
மண்ணில் சிதைந்து கிடக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (31-Jul-22, 12:44 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 44

மேலே