எனக்கோர் நண்பன்

நல்ல நண்பனைத் தேடி/
மனம் அலைந்து
திரிந்த போது/
இரு கரம் கூப்பி
வரவேற்றான் ஒரு நண்பன்/
மனமின்றி உள் நுழைந்தேன்/
அவன் அழைப்பை ஏற்று.../

புன் முகத்தோடு சென்ற என்னை/
இன் முகத்தோடு
அணைத்தான் அவன்.../

அணைத்தவுடனே பரவசமானேன்/
புதுப் புது மாற்றங்கள்/
உணர்ந்தேன் என்னுள்ளே.../

முதல் நாள் பழக்கம்
தொடர்ந்தது தினமும்/
அறிந்தேன் அவனை முழுதாய்/
உணர்ந்தேன் அவன்
உண்ணதத்தினை/
எத்தனை மாற்றங்கள் என்னுள்ளே/
அத்தனையும் உதவின
என் வாழ்வினிலே/

என் நேரமெல்லாம்
பொன்னானது
அவனுடன் இருக்கையிலே/

என் அறிவெல்லாம் விரிந்தது/
அவனைப் பார்க்கையிலே/

பொறுமையும் குடிகொண்டது/
வெறுமைகளும் நீங்கிற்று/

நண்பனாய் நல்லது பல
சொல்லித் தந்தான்/
அறிவுக் கண்ணைத் திறந்து
புது உலகம் காட்டினான்/

தோல்வியில் துவழ்கையில்
வாழ்வினில் உயர்ந்திடும்
வார்த்தைகளை மொழிந்தான்/

புத்துணர்வுகளை
அள்ளித் தந்தான்/
புதுமைகள் பலவற்றை
என்னுள்ளே புகுத்தினான்/

துன்பம், இன்பம்,
வெற்றி, தோல்வியென
என் வாழ்வின் அத்தனையிலும்
உற்ற நண்பனாய்
உடன் இருந்தான்/

பக்குவப்படுத்தி
வளப்படுத்தினான்/
உயர்ந்து நான் செல்ல
அவனே எனக்கு படிக்கட்டானான்/

இத்தனையும் செய்த
என் நண்பன் யார் என்று
சொல்ல மறப்பேனா நான்?/
சொல்லிவிட்டு
விடை பெறுகிறேன் நான்.../
என்றும் எப்போதும்
நான் விரும்பும்
அன்பு நண்பன் என் நூலகம்/

எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (30-Jul-22, 6:12 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 75

மேலே