அறூபா அஹ்லா - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர் | : அறூபா அஹ்லா |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 25 |
அவர்கள் நமக்கு
தெரியாத முகங்கள் தான்...
அவர்கள் நமக்கு
உற்ற உறவுகளும் இல்லை தான்...
அவர்கள் நமக்கு
அயலவர்களும் இல்லை தான்...
அவர்கள் நமக்காய்
துடிப்பவர்களும் இல்லை தான்...
ஆனாலும் அவர்கள் நம்
மனதின் கணத்தினை
அதிகப்படுத்திவிடுகிறார்கள்...
அவர்களுக்காய்
எம் இதயங்களும் துடிதுடித்துவிடுகின்றன...
அவர்களுக்காய்
எம் விழிகளும் விழிநீரை
சிந்திவிடுகின்றன...
அவர்களுக்காய்
எம் உள்ளமும் கரங்களும்
பிரார்த்தித்துவிடுகின்றன...
இவையெல்லாம் நடக்கின்றன நாம் இறைவனின் அடியார்கள் என்ற ஒன்றுக்குள்ளே அடங்கிவிடுவதனால்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா
சல சலத்து ஓடும் ஆற்றங்கரையின் ஓரத்திலே தன் துணிகளையெல்லாம் துவைத்துக்கொண்டிருக்கும் கலைவாணியின் சிந்தனைகளோ தன் செயலில் இல்லாமல் எதற்குள்ளோ சுழன்றவளாய் இருக்க அவளது கரங்களோ தன் வேலையை செய்துகொண்டிருந்தன. சுற்றியிருந்த தோழிகளின் கிண்டல் போச்சுக்களோ அவள் செவிகளில் விழுந்தும் விழாத நிலையிலும் முகத்திலே சிறு புன்னகையின் கீறல். ஆனால் உள்ளத்திலோ அத்தனை எண்ணச் சுவடுகளின் உலாக்கள். நாளைய பொழுதின் விடியல் அவளது வாழ்க்கையில் எப்படியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதனை அவள் எண்ணும் போதே கண்களின் ஓரத்திலே கண்ணீர் துளிகள் வழிந்தோடக் காத்திருக்க பெருமூச்சு விட்டவளாய் துவைத்த துணிகளை அள்ளிக்கொண்டு த

எம் வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் பற்றி மனதுக்குள் எண்ணும் போதே உள்ளத்தில் பாரம் அதிகரித்துவிடுகின்றது. தனித்திருக்கும் போது தான் பலதரப்பட்ட சிந்தனைகள் வந்து மூளைக்குள் அமர்ந்துகொள்கின்றன. நம் எதிர்காலம் பற்றிய நமது எதிர்பார்ப்புக்கள் கண் முன்னே வந்து நிழலாடிச் செல்கின்றன. அதனை அடைந்துகொள்வதற்கான சூழலோ நாம் இப்பொழுது இருக்கும் நிலையில் சாத்தியப்படுவது சாத்தியமற்ற ஒன்று. அதனால் உள்ளம் நடக்குமா? நடக்காதா?, முடியுமா? முடியாதா? என்பன போன்ற வினாக்களைத் தொடுத்து எமக்குள்ளே அச்சத்தையும் ஏற்படுத்தி தேவையற்ற சிந்தனைகளையும் புகுத்திவிடுகின்றன. இதனால் தேவையில்லாமல் மன உளைச்சலும் மன அழுத்தமும

என் நாசி சுவாசித்த
உன் மேனியின் வாசத்தை
காற்றிலே தேடுகிறேன்...
உன் நெஞ்சத்து
ஒலியின் தாலாட்டில்
தூங்கிய என் கண்கள்
இன்று உன் நெஞ்சத்து ஒலி
செவியினில் கேட்காததால்
தூக்கமோ தொலைதூரத்தில் தினமும்...
தொலைதூர வாழ்வு
தொலைவது எப்போதோ
பதில் செல்லடா
என் நெஞ்சத்து மன்னவனே?
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா
ஒவ்வொருவரின் தேவைகளைப் பொறுத்து அவற்றின் பெறுமதியும் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் கல்வி என்பது அனைவருக்குமே பெறுமதியான ஒரு விடயம். கல்வியால் கிடைக்கும் அறிவு ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது. அவ் அறிவினை எமக்கு வழங்குகின்ற புத்தகங்களோ தங்கத்தை விடவும் பெறுமதி வாய்ந்தவை. நல்ல நூற்களைக் கற்கும் போது நம் அறிவு வளர்வதுடன் சிறப்பானதொரு பக்குவத்தினையும் எமக்கு அளிக்கின்றன. நாம் ஆடைகளை அடுக்கி வைக்கப் பயன்படுத்தும் அலுமாரிகளை விட புத்தக அலுமாரிகளின் பெறுமதி அளவற்றது. அதன் பாதுகாப்பும் அத்தியவசியமானதாகும்.
எம் ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் ஒரு சிறு நூலகம் இருக்க வேண்டும். அப்போது தான் வாசிப்பின