கற்றுக் கடப்போம்…
வாழ்க்கை தரும் வலிகள்
நம்மை கண்ணீர் சிந்த வைக்கின்றன…
நம்மை முடங்கச் செய்துவிடுகின்றன…
நம்மை அழுத்தத்திற்குள்ளே
மூழ்கடிக்கச் செய்துவிடுன்றன…
நம்மை துவளச் செய்துவிடுகின்றன…
நம்மை கோழையாக்கிவிடுகின்றன…
இன்னும் அதே வலிகள் தான்
நம்மை முன்னோக்கி
நகர்ந்திடச் செய்கின்றன…
நம்மை மீண்டெழ வைக்கின்றன…
நம்மை நமக்கே
புரிந்துகொள்ள வைக்கின்றன…
நம்மை எட்டி நடை போட வைக்கின்றன…
நம்மை சாதித்திட வேண்டுமென்ற
வைராக்கியத்தை விதைக்கின்றன…
வாழ்க்கை தரும் வலிகளை சிறுது நேரம் அழுது கழித்துவிட்டு அடுத்த எட்டுக்களை எடுத்து நகர்ந்தால் பின்நாளில் அழுது கழித்த நேரம் கூட வீணாய்த் தான் தோன்றும்...
வாழ்க்கை தரும் வலிகளில் கற்றுக் கடப்போம்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா