வெற்றிடமாய்…வெறுமையாய்…
சமூகப் பிராணியான எமக்கு ஒவ்வொரு உறவுகளும் முக்கியம் தான். ஏதோ ஒரு வகையில் அவர்களுடன் உணர்வு ரீதியான பிணைப்பு இருக்கத்தான் செய்கின்றது. அருகினில் எத்தனை உறவுகள் இருந்தாலும் சரி, தொலைவினில் எமக்காய் எத்தனை உறவுகள் இருந்தாலும் சரி, தந்தை என்ற உறவு இல்லையென்றால் அந்த வெற்றிடம் என்றுமே வெறுமை தான்... மீள் நிரப்பிடவே இயலாத ஒன்று தான்...
அவருடன் மகிழ்ந்திருப்போம்…
முறைத்துக்கொண்டு திரிந்திருப்போம்…
சண்டையிட்டு சமாதானமாகிருப்போம்…
வாக்குவாதங்களுடன் கடந்திருப்போம்…
ஏட்டிக்குப் போட்டியாய் நடந்திருப்போம்…
அவருக்குப் பிடிக்காததை செய்திட முனைந்திருப்போம்…
பிடிவாதமாய் ஒற்றைக் காலிலே நின்றிருப்போம்…
உடன் இருந்து உண்டிருப்போம்…
கை பிடித்து நடந்திருப்போம்…
விரும்பியதை தயக்கமின்றி கேட்டிருப்போம்…
செல்லப் பிள்ளையாய் இருந்திருப்போம்…
அவரோடு பயணித்திருப்போம்...
முடிவுகள் எடுக்கையில் கலந்தாலோசித்திருப்போம்…
எம் உணர்வுகள் அனைத்தையும் அவரிடம் வெளிப்படுத்தியிருப்போம்
துணையாய் உடனிருப்பார், நம் தந்தை தானே என்ற நம்பிக்கையில்... ஆனால் காலத்தின் நகர்வினில் மரணம் அணைக்கையில் அவர் விட்டுப் பிரிகையில் எல்லாமே சிதைந்த உணர்வுகள் தான் அவரின்றி தொடரும் நாள்களில்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா