கண்ணன் கீதம்-கண்ணன் உரலில் கட்டுண்டது
திருடிவெண்ணை யுண்டான் தன்மகன் என்று
கோபியர் கூற .கேட்ட யசோதை
சிறுவன் இவன்என்ப தும்மறந்தே கண்ணனைக்
உரலில் கட்டிவிட்டு இன்றுநீ இங்கேயே
இருஎன்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்
அவளறிந்தா ளல்லள் 'தானேகட்டு உண்டவன்
தன்மகன் அவன் மாயன் மனிதன்
அல்லன் என்பதை யே