குறள்மணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குறள்மணி
இடம்:  மயிலாடுதுறை. செம்பொன்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Mar-2022
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  1

என் படைப்புகள்
குறள்மணி செய்திகள்
குறள்மணி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2022 2:34 pm

எதிர் நோக்கியபடி 🏵️🌻🌹



வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட வக்கற்ற சீவன்கள்..வயிற்றை நிறைக்க போராடும்
வலிமையில்லா போராளிகள்..வண்ண வண்ண கனவுகளை இருளுக்குள் தொலைத்தவர்கள்..வாழ்க்கை என்றால் என்னவென்று, வாழ்ந்துபார்த்தும் அறியாதவர்கள்..வகை வகையாய் திட்டமிட்டும்,வாழும் மட்டும் எட்டாதவர்கள்..பண்டிகையில் கூட பட்டாடை பார்த்ததில்லை..உண்டியலில் போட்டு ஒரு காசு சேர்த்ததில்லை..கையளவு வரும் வருமானம் , கடலளவு விலை நீர்மானம்.தொட்டுக்க தேவையில்லை, கண்ணுல உப்பிருக்குஒரப்புக்கு பஞ்சமில்லை நெஞ்சில நெறையயிருக்கு..ஏழை வீட்டு பானையில,
வெந்த சோறும் வெறச்சுக்கிடக்கு..உண்மை நேர்மையெல்லாம் விலைவாசியிலமறஞ்சு போச்சு,நீதி நேர்ம

மேலும்

மிகவும் அருமை 06-Jun-2022 2:57 pm
குறள்மணி - எண்ணம் (public)
06-Apr-2022 11:38 pm

மரண ஓலங்கள் 🏵️



சுய நலத்திற்காகவோ,
சுய இலாபதிற்காகவோ,
தன் நலம் கருதா காடுகள்
காலிசெய்யப்படுகின்றன..

காடுகளையே நாடுதலென்றிருந்த சிற்றினங்களும்,
பற்றிடமின்மையால் மாய்ந்தொழிகின்றன.

மன்றாடிய மரண ஓலங்கள் -அந்த
மலைகளில் மோதி
மரங்களுக்கிடையில் மங்கி மறைகிறது..

ஆறறிவு மேதைகளுக்கு,
அவை இட்ட சாபமோ, பாதையெங்கும் பரவிக்கிடக்கிறது..,
அவை மரங்களுதிர்த்த சருகுகளல்ல.,

மனிதன்
நிகழ்த்தியபாவத்தின்
குப்பைகள். 🏵️🏵️



மேலும்

குறள்மணி - எண்ணம் (public)
06-Apr-2022 11:21 pm

விற்பனையாகாத கற்பனைகள் 🏵️


கற்பனையிலேயே தன் கனவுகளை முடக்கிகொண்டாள்.

வெளிச்சம் தீண்டாத தன் வாழ்வின் இளமையை, விரக்தியால் நிரப்பினாள்.

தாவல்களும் தழுவல்களும் காட்சியாய் விரியாமல், காணலாய் மறைந்தது.

மூச்சுக்காற்றின் சுவாசங்களும், மெல்லிய முனகல்களும் ஆசுவாச பெருமூச்சொன்றில், அனாதையாய் திரிகிறது.

தீயாய்ச்சுடும் தேகத்தின் தாகத்திற்கு- தன் கண்களின் நீரை விலையாய் கொடுக்கிறாள்.

வயதாகிவிட்டதே.!! எனும் வார்த்தையில் தான், எத்தனை அம்புகள் மறைந்திருக்கிறதோ.??

அந்த இரணமான இதயத்தில் கசிந்து வெளியேறும் செந்நீர்த்துளிகளுக்கே வெளிச்சம் 😥🏵️

மேலும்

குறள்மணி - எண்ணம் (public)
06-Apr-2022 10:55 pm

(மர)ணத்திற்கு பின் தண்டனை 🏵️


உனை வெட்டி கூரை வேய்ந்தேன்
-இடம் தந்தாய்.,

உனை வெட்டி கட்டில் செய்தேன் -உறக்கம் தந்தாய்.,

உனை வெட்டி அகப்பை செய்தேன் - உணவு தந்தாய்.,

உனை வெட்டி வாகனம் செய்தேன் - பயணம் தந்தாய்.,

உனை வெட்டி பொருள் செய்தேன் - பணம் தந்தாய்.,

உனை வெட்டி வெட்டியே  நான் ஒய்ந்து மாய்ந்து போனேன்.,
இப்போதும் எனை பல்லக்கில் சுமந்து போகிறாய்..

என் உடலெரிக்க, நீ உன்னையே விறகாய் தந்தாய்.

தீ வெட்டியாய் மாறி, எனை தீக்கிறையாக்கிவிட்டு
வெட்டியானின் கையில்
வெறுந்தடியாய் வீற்றிருப்பாய்.

-நான் வெட்டியாய் செய்த பாவத்திற்கு, உன் தடி கொண்டெனை  தண்டிப்பதற்கு. 🏵️

மேலும்

ஆகா ஆஹா அருமை பாராட்டுக்கள் 15-Apr-2022 7:28 pm
கருத்துள்ள எண்ணங்கள் பாராட்டுக்கள் நெடுஞ்சாலை தோறும் நிழல்தர நின்ற நெடுநாள் மரம்வீழச் செய்தார் -- கொடுத்ததார் கோடாரி கட்சிப் பொறுப்புத்தான் அந்தாளை போடாவிட் டார்தடாவில் போ 15-Apr-2022 7:12 pm
குறள்மணி - Walter அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2021 10:19 pm

சமீப காலமாக நவீன கால ஓவியங்களை காண நேர்ந்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் நண்பன் பல நுணுக்கங்களை கூறி அந்த ஓவியத்தை விளக்கினான்.
அதேபோல் andre tarkovsky போன்ற இயக்குனர்களின் படங்களை பார்த்தால் எனக்கு தூக்கம் வரும் .‌‌ பல திரைவிமர்சனங்களை படித்த பின்னர் எனக்கு அந்த படத்தை அனுபவிக்க முடிந்தது, ஆகையால் எனது கேள்வி கலையை ரசிக்க கல்வி ( அதாவது அறிவு , knowledge) தேவையா. அது தெரியாமல் ரசிக்க முடியுமா?

மேலும்

ரசனை ஒன்றே போதும் 24-Mar-2022 6:44 pm
ஆர்வம்சுவையூட்டு உணர்ச்சியார்வம் இருப்பினும் , அதுவே அறிவு ஆகும். 20-Sep-2021 12:50 pm
தேவையில்லை, ஆர்வம் இருந்தால் போதும். 09-Sep-2021 2:03 pm
பொது அறிவு இருந்தால் போதும் 05-Sep-2021 7:32 pm
குறள்மணி - குறள்மணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2022 12:14 pm

தேர்தல் பங்கீடு

பட்டிக்காட்டு வயற்காடுகளில் அறுவடை செய்து, பட்டினத்து பைவ்ஸ்டார் ஹோட்டல்களில் பங்கிட்டுக்கொள்ளப்படுகிறது.... ஜனநாயகம் 🌸

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே