விற்பனையாகாத கற்பனைகள் 🏵️ கற்பனையிலேயே தன் கனவுகளை முடக்கிகொண்டாள்....
விற்பனையாகாத கற்பனைகள் 🏵️
கற்பனையிலேயே தன் கனவுகளை முடக்கிகொண்டாள்.
வெளிச்சம் தீண்டாத தன் வாழ்வின் இளமையை, விரக்தியால் நிரப்பினாள்.
தாவல்களும் தழுவல்களும் காட்சியாய் விரியாமல், காணலாய் மறைந்தது.
மூச்சுக்காற்றின் சுவாசங்களும், மெல்லிய முனகல்களும் ஆசுவாச பெருமூச்சொன்றில், அனாதையாய் திரிகிறது.
தீயாய்ச்சுடும் தேகத்தின் தாகத்திற்கு- தன் கண்களின் நீரை விலையாய் கொடுக்கிறாள்.
வயதாகிவிட்டதே.!! எனும் வார்த்தையில் தான், எத்தனை அம்புகள் மறைந்திருக்கிறதோ.??
அந்த இரணமான இதயத்தில் கசிந்து வெளியேறும் செந்நீர்த்துளிகளுக்கே வெளிச்சம் 😥🏵️