மரண ஓலங்கள் 🏵️ சுய நலத்திற்காகவோ, சுய இலாபதிற்காகவோ,...
மரண ஓலங்கள் 🏵️
சுய நலத்திற்காகவோ,
சுய இலாபதிற்காகவோ,
தன் நலம் கருதா காடுகள்
காலிசெய்யப்படுகின்றன..
காடுகளையே நாடுதலென்றிருந்த சிற்றினங்களும்,
பற்றிடமின்மையால் மாய்ந்தொழிகின்றன.
மன்றாடிய மரண ஓலங்கள் -அந்த
மலைகளில் மோதி
மரங்களுக்கிடையில் மங்கி மறைகிறது..
ஆறறிவு மேதைகளுக்கு,
அவை இட்ட சாபமோ, பாதையெங்கும் பரவிக்கிடக்கிறது..,
அவை மரங்களுதிர்த்த சருகுகளல்ல.,
மனிதன்
நிகழ்த்தியபாவத்தின்
குப்பைகள். 🏵️🏵️