நம் பிரிவு உன் பிறந்த வீட்டு சொந்தங்களால் உருவானது...
நம் பிரிவு உன் பிறந்த வீட்டு சொந்தங்களால்
உருவானது
மோதல் உன் ஈகோவினால்
உருவானது
ஈகோ உன் அகம்பாவத்தால்
உருவானது
அகம்பாவம் உன் நிதானத்தை
இழந்தப்போது உண்டானது
நிதானம் இழந்தால்
அனைத்திலும் அவமானம் அதையெல்லாம் தாண்டி இனியாவதுவள்ளுவனின் வாசுகி போல்
வாழ்ந்திடதான் அழைக்கிறேன் நீ
வாரதிசை பார்த்து தினம்
வாடிமனம் கொதிக்கிறேன்
உன்னை என்று
என்னுள் அமர்த்தினேனோ
அன்றில் இருந்து
நீ செய்யும் தவறுகளையும்
மன்னித்தும் மறந்து செல்கிறேன்
என்னை நீயும்
உன்னை நானும் சமாதனம்
செய்யும் நொடிகளில் அன்பு கலந்த
வார்த்தைகளும் சுகமான
காதலும் நம்மில்
பத்தாம் வகுப்பு படித்த தற்குறி என்றாய் உன்னால் மட்டும்
உன் ஏளனம் ஏற்படுத்திய வலிக்கு
இன்னும் மருந்திட்டு கொண்டிருக்கிறேன் என்
பெயருக்கு பின்னால்
பல எழுத்துக்களைப் போட்டு-Dr.s.vasantharaj-BAJM(LLB)DCA,DTC,JAP,GS,GEM,NUM
என்று கற்று கொள்ளும் மாணவனாக முயற்சி