எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

(மர)ணத்திற்கு பின் தண்டனை 🏵️ உனை வெட்டி கூரை...

(மர)ணத்திற்கு பின் தண்டனை 🏵️


உனை வெட்டி கூரை வேய்ந்தேன்
-இடம் தந்தாய்.,

உனை வெட்டி கட்டில் செய்தேன் -உறக்கம் தந்தாய்.,

உனை வெட்டி அகப்பை செய்தேன் - உணவு தந்தாய்.,

உனை வெட்டி வாகனம் செய்தேன் - பயணம் தந்தாய்.,

உனை வெட்டி பொருள் செய்தேன் - பணம் தந்தாய்.,

உனை வெட்டி வெட்டியே  நான் ஒய்ந்து மாய்ந்து போனேன்.,
இப்போதும் எனை பல்லக்கில் சுமந்து போகிறாய்..

என் உடலெரிக்க, நீ உன்னையே விறகாய் தந்தாய்.

தீ வெட்டியாய் மாறி, எனை தீக்கிறையாக்கிவிட்டு
வெட்டியானின் கையில்
வெறுந்தடியாய் வீற்றிருப்பாய்.

-நான் வெட்டியாய் செய்த பாவத்திற்கு, உன் தடி கொண்டெனை  தண்டிப்பதற்கு. 🏵️

பதிவு : குறள்மணி
நாள் : 6-Apr-22, 10:55 pm

மேலே