விடியும் பொழுது நமக்கானது

துன்பத்திலே துயிலும் தோழா/
இன்பம் வரும் தளராதே/
கரு மேகமும்
வென் மேகமாகிறதே/
இருள் மறைந்து
விடியலும் பிறக்கிறதே/
விழி மூடினாலே
வழி மறைக்கிறதே இருட்டு/
விழி திறந்து பார்
வழி பிறக்குமே
விரைவிலே/

இருள் மறைகிறதே படிப்படியாய்
ஒளி வந்து படுகையிலே/
உன் இருள் நீங்கிடவே
உழைத்திடு அயராமலே/
விடியும் விடியலும்
நமக்கானதாய் மாறிடுமே/

விடியல் வர சுழல்கிறதே பூமி/
உன் விடியல் வர
தயங்கி நிற்காதே நீ/

விடியும் பொழுதோ
நமக்கானதாய் மாறிட
நாளும் நீ உழைத்திட வேண்டுமே/

சிறு சிறு சேமிப்போ
பெரும் பயன் தருமே/
உன் சிறு சிறு முயற்சிகளோ
விடியும் பொழுதை
உறக்கானதாய் மாற்றிடுமே/

எழுதியவர் : அறூபா அஹ்லா (15-Aug-23, 12:40 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 105

மேலே