மெல்ல இறங்கிடு சந்திராயன் 3 🌕

மெல்ல இறங்கிடு !!
🌕🌕🌖🌖🌓🌓🌕

ஆயிரம் அறிஞர்தம்
அயரா உழைப்பினால்

பாயிரம் பாடிட
அவதரித்தாய்!

விதிகளை மதித்தே
உயர்கின்றாய் அந்த

விண்ணகம் அதிர்ந்திட
விரைகின்றாய் !

படிப்படியான முன்னேற்றம்
பாடம் எமக்கும் கற்பித்தே

அடித்துத் துவைத்தே
அடைந்தாயே

அழகிய
அம்புலித் தென்முனையே!

உலகோர் மகிழ்ந்திட
இந்தியர் கொண்டாடிட

இறங்கிடு மென்மையாய்
நிலவினிலே !

இதுவொரு சரித்திரம்
இணையிலா புதுத்திறம்

இந்தியத் தாய்க்கே
மணிமகுடம் !!


வாழ்க ! வெல்க! சந்ராயன்3.

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் (23-Aug-23, 9:13 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 82

மேலே