நிவில் கால் பதித்தோம்
விண்ணிலே வியந்திடும் வெற்றி !
🌖🌕🌓🌕🌖🌓🌕🌖🌕
மண்ணெலாம் மயங்கிடும் வெற்றி - அந்த
விண்ணகம் வியந்திடும் வெற்றி!
தொடாத தொடர்பினைக் கொண்டே
தொலைதூர நிலவிலே
கால்களைப் பதித்திட்டான்
சந்ராயன் 3 !
கண்துஞ்சிடாது
மெய்வருத்தம் பார்த்திடாது
கடுமையாய் உழைத்திட்ட யாவர்க்கும்
கண்கள் கசிந்திட
வாழ்த்துகள் கூறுவோம் !
வாழ்க எம் நாடு என்றும்
வளர்க எம் நாடு !
என்றென்றும் வெற்றிகள்
இனியெல்லாம் தொடரட்டும் !
வாழ்க ! வெல்க !!
-யாதுமறியான்.