சிறு குருவி கூறும் சேதி

கஷ்டப்பட்டு கட்டிய
என் சிறு கூடு
காற்றடித்து
கீழே சிதைகையிலே
கவலை கொண்டு
சிறகொடிந்து
விடுவதில்லை நான்...

தேடியலைந்து
குச்சிகள் பொறுக்கியெடுத்து
புதிய கிளையினிலே
புதிய கூட்டினையே
புதிதாய் கட்டியே
குடி புகுவேன் நான்...

சிறு பறவை நானே
சிறகொடிந்து
சிதறிப் போகாமல்
புதிதாய் துவங்குகையில்
உனக்கெதுக்கு தளரல்கள்?
துவளாது துணிந்தே செல்...

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (4-Oct-23, 9:11 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 29

மேலே