பல தடைகள் தாண்டியே இவள் சாதனைகள்

மண்ணுக்குள்ளே புதைந்து போனாள் - அன்று இவள்
விண்ணின் மேலே விண்மீனாய் ஜொலிக்கிறாள் இன்று
விதையென புதைந்தவள்
வீரமாய் எழுந்தாள்
வீரியமாய்
எழுந்தாள் இவள்
சுற்றம் ஏசிய ஏச்சுக்களோ
தூசிகளாயின இவளுக்கு
தட்டிவிட்டு முன்னேறினாள்
தன் தடத்தையோ ஊன்றியே பதித்தாள் இவள்
சாதனைகளோ இவள் வசமானதே
குடும்பமென குதூகலித்தாலும் துன்பமென கதிகலங்கினாலும்
தன் குறியில் நிலையானவள் இவள்
அடைந்தாள் இலக்குகளை
படைத்தாள் சாதனைகளை
கிடைத்தது புகழ்
அடைந்தனர் அதிர்ச்சி ஏசிய சுற்றத்தினர்
தடைகள் பல இவளுக்கு
தகர்த்துச் சென்றாள் இவள்
அடிகளோ பல விழுந்தன
அழாமல் எழுந்து சென்றாள் இவள்
பெண்ணே!
தடைகள் உண்டென ஒதுங்கிடாமல்
பொன்னாய் மின்னுவாய்
விண்ணிலும் உன் நாமமே
மின்னுமென வெளியே வா
சாதனைகளை இழுத்திடலாம் உன் பக்கம்

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (10-Aug-24, 5:39 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே