கவனித்துப் பார் இளைஞனே!

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*கவனித்து பார்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இளைஞகர்ளே !
தூக்கி விட
ஆள் இல்லை என்று
துவண்டு கிடக்காதே !

விதை தூக்கி விட
ஆள் தேடினால்
அது துளிர் விட்டிருக்குமா?

அலை தூக்கி விட
ஆள் தேடினால்
கரையை அடைந்திருக்குமா?

உதவி செய்ய
யாரும் இல்லை என்று
உட்கார்ந்து இருக்காதே....

கைகள் இல்லாதப் பறவைகள்
உதவி
கேட்டுக் கொண்டிருந்தால்
கூடு கட்டியிருக்க முடியுமா ?

தடைகளுக்கு
பயந்து நின்றிருக்காதே!
நதிகள் தடைகளுக்கு
பயந்து நின்றிருந்தால்
அது கடலை
அடைந்திருக்க முடியுமா?

தோல்வியை
கேவலமாக நினைக்காதே?
சிலந்தி
தோல்வியை கேவலமாக
நினைத்திருந்தால்
அதன் சந்ததி
300 மில்லியன் ஆண்டுகளாக
இந்த உலகில்
வாழ்ந்திருக்க முடியுமா?

உருவம் சிறப்பாக
இல்லை என்று
சிதைந்து விடாதே!
சிற்றெறும்புக்கு
அப்படி என்ன
சிறப்பான உடம்பு ?
அது தன்னைவிட
அதிகம் உள்ள
எடையைத் தூக்கவில்லையா?

இயற்கையிடம்
பெற்றுக் கொள்ள மட்டுமல்ல
கற்றுக் கொள்ளவும்
நிறைய இருக்கிறது
கவனித்துப் பார்.....!

*கவிதை ரசிகன்*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

எழுதியவர் : கவிதை ரசிகன் (31-Aug-24, 9:24 pm)
பார்வை : 49

மேலே