வெற்றி நீடிக்க
தோல்வியைக் கண்டு
சோர்ந்து போனால்
சோகங்கள் வந்து
சேர்ந்து கொள்ளும்...
சோதனைகள் வந்தால்
சோம்பலை உடைத்து
சாதனைகள் செய்தால்
சரித்திரம் படைக்கலாம்...
இதயம் துடித்தால்தான்
வாழ்நாள் நீடிக்கும் ...
தோல்வியால் துடித்தால்தான்
வெற்றியும் நீடிக்கும்...