Mohanapriya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mohanapriya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 12 |
புள்ளி | : 0 |
பிஞ்சிலே பசியிலும்
தவழ்ந்து எழுந்து
விழுகையில்
வலியிலும் ஒலித்தது !
சிறு வயதில்,
கேட்டதைக் கொடுத்த
ஆயுதமாய்
தண்டனைகள் தடுத்த
கேடயமாய்
அதுவே - நாம்
நிறைய பேசியது !
எல்லையற்ற
இன்னல்களில்
பீறிட்டு ஓடியது,
மட்டற்ற
மகிழ்ச்சியிலும்
சொ(மொ)ட்டுகளாய்
மலர்ந்தது !
அதைப் பேசத்
தேவை இல்லை
பக்குவம் ....
பேசாமலிருக்கத்தான் ?!!
வளர்ந்த பின்,
தனிமையிலும்
தனக்குள்ளும் மட்டும்
பேசுவதால்
புதைந்து
போவதில்லை அது...
உறவுகளின்
மறைவிலும்
உணர்வுகளின்
நிறைவிலும்
வெடித்துப் பேசித்தான்
ஆக வேண்டும்
அம்மொழியை !
மற்ற வேளையில்,
குளியலறைச்
ஆசைகள் போக்கு காட்டும் !ஆசைப் படாததும் வந்து சில நாள்ஆனந்தமூட்டும் !!காதலியே மனைவி ஆவாள் !இல்லையேல் நீ காதலிக்க,உன் மனைவியே ஏவாள் !!தோல்விகள் பயம் காட்டும் !அதுவே வழிகாட்டி, பின்வெற்றியின் முகம் காட்டும் !!வாழ்க்கை ஓர் நாள் சலிப்பூட்டும் !மாற்றத்துக்கான சமிக்ஞைஎன்று புரிந்து கொள் !!முடிந்த வரை உலகம் சுற்று !உன் மறு ஜென்மம்ஈசலாகக் கூட இருக்கலாம் !!உன் பேர் எழுது, புகழ் சேர் !அன்பு காட்டு, அறிவைப் பரப்பு !!கவலையைச் சிறை பிடி !உன் ரசனை எனும் வீட்டின்பூட்டைத் திற !!இயற்கையை வர்ணி,காதல் கொள், கட்டி அணை !!!கம்ப்யூட்டர் வேலையாயினும்,கழனியில் உழவும் கற்றுக் கொள் !!பட்டம் படி !அப்பன் தொழிலும் பழகு !!ரா
காற்றே !!!
உன் மெட்டுக்கு
இசைந்தாடின
மரங்கள் !
உன் வார்ப்புக்கு
சிலையாகின
மேகங்கள் !
உன் வேகத்துக்கு
விலையாகின
பயிர்கள் !
உன் மௌனத்தால்
வழிந்தோடின
வியர்வைத் துளிகள் !
கோடையில் அனலாய்,
வாடையில் குளிராய்,
வதைப்பதுன் விளையாட்டு !
சுவாசமும் - மலரின்
வாசமும் தந்தாய் !
துளையில் வளைந்தோடி
வெறும் ஓசையை
இசையாய் தந்தாய் !
மலையோடு
கூட முயன்று
பின் ஊடலில்
அழுகிறாய் !
மழையாக !!
மன்னித்து விடு,
உன் ஒரு த(ம)லைக் காதல்
நிறைவேறக் கூடாது
இப்பூமி நனைய !!
காற்றே !!!
மெல்லியதாய் வீசு !!
- நா முரளிதரன்
முதல் முத்தம்...!!
தருவதில் இன்பமா ?
பெறுவதில் இன்பமா ?
பெறுவதில் தானே..!
அந்த வகையில், நான் தான்
பேரின்பம் பெற்றவன்..!!
காத்திரு காதலியே,
அப்பேரின்பம் பெற,
மறு ஜென்மம் வரை !!!
- நா முரளிதரன்
அலை தொட்ட கரை போல,
உன் பார்வை தந்த ஈரம் !
மழை நனைத்த மண்ணாக,
நீ கொண்ட வாசம் !
தென்றலின் தீண்டல்,
உன் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம் !
நிலவின் குளிர் தந்தது,
நீ பேசிய மொழி !
நெஞ்சிலே பொக்கிஷமாய்,
நீ வந்து சென்ற கனவுகள் !
புயல் விட்ட சுவடு,
"இல்லை" என்றஉன் சொல் தந்த காயம் !!!- நா முரளிதரன்
யாரடி நீ எனக்கு?
"டா" எனும் தோழியா?
சண்டையிடும் சகோதரியா?
பாசம் கொண்ட அன்னையா?
நேசம் கொண்ட காதலியா?
இல்லை,
நான் கொஞ்ச பிறந்த
பெண் பிள்ளையா?
யாரடி நீ எனக்கு?
இவை யாவும் தருவதால்,
நீ எனக்கு "தாரமோ" !!!
- நா முரளிதரன்
என் பார்வை,
மனதின் மொழியா? இல்லை,
அறிவின் வழியா?
அறிவின் வழி சென்று வெல்வதா? இல்லை,
மனதின் மொழி கொண்டு எதிலும் மகிழ்வதா?
எது சரி? சற்றே குழப்பம் தான்!
உள்ளம் சொல்வதையே கேள் என்ற
விவேகானந்தரைப் போற்றவா? இல்லை,
அறிவு கொண்டு வாழ்க்கை எனும் பாறையைச் சிற்பமாக்கச் சொன்ன அண்ணாவின் கைக் கோர்க்கவா ?
மனதை உலகரியத் திறந்தால்
அறிவு பெருகும்.
அறிவு பெருக அது ஒருவனை
உள்ளத்தின் வழியே தானே செலுத்தும்
அதுவே அவன் பெற்ற ஞானம்,
அனுபவ அறிவு!
சுலபமாகச் சொன்னால்,
மனதின் மொழி உனக்கானது, நீ மேம்பட !
உன் அறிவு உன்னைச் சார்ந்த உலகுக்கானது.
என் பார்வையில்,
இவ்விரண்டும், அடிப்பட
லீவு வேணும்...!
காலை விடிந்தும்
வேலை மறந்து
மெதுவாய் எழனும் !
நாளையை எண்ணாமல்
நல்ல தூக்கம் போடனும் !
கால்கள் (ஃபோன்) இல்லாத
நாட்கள் வேணும் !
வீட்டில், நினைத்த உடனே
நேரில் நிக்கனும் !
ரீல்ஸ் அண்ட் ஷார்ட்ஸ் ஐ
மறக்கச் செய்து,
காதல் செவ்வாயும்,
காவிய புதனும்
கண்டு மகிழனும்!
ஓலா கேப், கூகிள் மேப்
ஏதுமின்றி,
மொத்த ஊரையும்
சுற்றித்திரியனும் !
நாட்டு நடப்பு
அடுத்த நொடியே வேணாம்,
டீக்கடை பேப்பரில்
அடுத்த நாள் போதும் !
வேளைக்கு வேளை
வித விதமாய் வேண்டாம்,
பசி எடுக்கத்
தின்று பழகனும்!
வேலை நாட்களில்,
பரபர வீதியில் !
பள்ளிச்சிறுவர்,
ஆபீஸ் பைக்கர்ஸ்,
ஹாரன் சத்