வாழ்வை வாழ்
ஆசைகள் போக்கு காட்டும் !
ஆசைப் படாததும் வந்து சில நாள்
ஆனந்தமூட்டும் !!
காதலியே மனைவி ஆவாள் !
இல்லையேல் நீ காதலிக்க,
உன் மனைவியே ஏவாள் !!
தோல்விகள் பயம் காட்டும் !
அதுவே வழிகாட்டி, பின்
வெற்றியின் முகம் காட்டும் !!
வாழ்க்கை ஓர் நாள் சலிப்பூட்டும் !
மாற்றத்துக்கான சமிக்ஞை
என்று புரிந்து கொள் !!
முடிந்த வரை உலகம் சுற்று !
உன் மறு ஜென்மம்
ஈசலாகக் கூட இருக்கலாம் !!
உன் பேர் எழுது, புகழ் சேர் !
அன்பு காட்டு, அறிவைப் பரப்பு !!
கவலையைச் சிறை பிடி !
உன் ரசனை எனும் வீட்டின்
பூட்டைத் திற !!
இயற்கையை வர்ணி,
காதல் கொள், கட்டி அணை !!!
கம்ப்யூட்டர் வேலையாயினும்,
கழனியில் உழவும் கற்றுக் கொள் !!
பட்டம் படி !
அப்பன் தொழிலும் பழகு !!
ராப்பகலாய் உழை,
உறவைப் பற்றியும் நினை !
உடல் நலம் பேணு !!
நட்சத்திரங்கள் எண்ணு !
நடு சாமத் தேநீர் குடி !!
பிடித்ததைச் செய் !
உன் வயிற்று வலிக்கு
பிரியாணி கூட மருந்தாகலாம் !!
சாஸ்திரம் புரிந்து கொள் !
காலத்திற்கேற்ப
வழக்கத்தை மாற்று !!
சவாலை ஏற்றுக் கொள் !
தேவையெனில், மறுத்தும் பேசு !!
புராணம் படி !
தொழில் நுட்பமும் அறி !!
சாகும் வரை வாழ் !
செத்த பின்னும் பேசு !!
- நா முரளிதரன்