புயலின் சுவடு

அலை தொட்ட கரை போல,
உன் பார்வை தந்த ஈரம் !

மழை நனைத்த மண்ணாக,
நீ கொண்ட வாசம் !

தென்றலின் தீண்டல்,
உன் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம் !

நிலவின் குளிர் தந்தது,
நீ பேசிய மொழி !

நெஞ்சிலே பொக்கிஷமாய்,
நீ வந்து சென்ற கனவுகள் !

புயல் விட்ட சுவடு,
"இல்லை" என்ற

உன் சொல் தந்த காயம் !!!

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (19-Mar-22, 8:43 am)
Tanglish : puyalin suvadu
பார்வை : 83

மேலே