லீவு லெட்டர்

லீவு வேணும்...!

காலை விடிந்தும்
வேலை மறந்து
மெதுவாய் எழனும் !
நாளையை எண்ணாமல்
நல்ல தூக்கம் போடனும் !

கால்கள் (ஃபோன்) இல்லாத
நாட்கள் வேணும் !
வீட்டில், நினைத்த உடனே
நேரில் நிக்கனும் !

ரீல்ஸ் அண்ட் ஷார்ட்ஸ் ஐ
மறக்கச் செய்து,
காதல் செவ்வாயும்,
காவிய புதனும்
கண்டு மகிழனும்!

ஓலா கேப், கூகிள் மேப்
ஏதுமின்றி,
மொத்த ஊரையும்
சுற்றித்திரியனும் !

நாட்டு நடப்பு 
அடுத்த நொடியே வேணாம்,
டீக்கடை பேப்பரில்
அடுத்த நாள் போதும் !

வேளைக்கு வேளை
வித விதமாய் வேண்டாம்,
பசி எடுக்கத்
தின்று பழகனும்!

வேலை நாட்களில்,
பரபர வீதியில் !

பள்ளிச்சிறுவர்,
ஆபீஸ் பைக்கர்ஸ்,
ஹாரன் சத்தம்,
ஹாரர் முகங்கள்,
அய்யோ பாவம் ??!!

சிக்னலில் பொறுத்து,
சிரித்திட வேண்டும்.
எனக்கு லீவு பா !! என்று,

அரை குறையாக...
அரசியல், சினிமா
அனைத்தும் பேசி
அன்றே மறக்கணும் !

இருள் விலக்கும் காலைச் சூரியன்,
நண்பகலின் உச்சி வெயில்,
கண்ணில் பட்டவுடன் கலைந்து போகும்
மாலை வானின் மேகச்சிற்பங்கள்,
கூட்டைத் தேடி காக்கைக் கூட்டங்கள்...!

தினம் தினம் வருவது தான்
இப்போதாவது ரசிக்கனும் !

ஜெட்டின் புகையை
நின்று ரசிக்க,
கண்ணில் பட்டதைக்
கண்டு ரசிக்க,
கமிட்மெண்ட் இல்லாத
லீவு வேணும் ??!!

மூளையை வேலையில்
முழுசாய் செலுத்த
கொஞ்சம் லீவு வேணும் !!
கொஞ்ச நாள் லீவு வேணும் !!

- முரளிதரன் 

எழுதியவர் : Muralidharan (13-Mar-22, 1:28 pm)
பார்வை : 220

மேலே