என் பார்வையில் - அறிவும் மனதும்
என் பார்வை,
மனதின் மொழியா? இல்லை,
அறிவின் வழியா?
அறிவின் வழி சென்று வெல்வதா? இல்லை,
மனதின் மொழி கொண்டு எதிலும் மகிழ்வதா?
எது சரி? சற்றே குழப்பம் தான்!
உள்ளம் சொல்வதையே கேள் என்ற
விவேகானந்தரைப் போற்றவா? இல்லை,
அறிவு கொண்டு வாழ்க்கை எனும் பாறையைச் சிற்பமாக்கச் சொன்ன அண்ணாவின் கைக் கோர்க்கவா ?
மனதை உலகரியத் திறந்தால்
அறிவு பெருகும்.
அறிவு பெருக அது ஒருவனை
உள்ளத்தின் வழியே தானே செலுத்தும்
அதுவே அவன் பெற்ற ஞானம்,
அனுபவ அறிவு!
சுலபமாகச் சொன்னால்,
மனதின் மொழி உனக்கானது, நீ மேம்பட !
உன் அறிவு உன்னைச் சார்ந்த உலகுக்கானது.
என் பார்வையில்,
இவ்விரண்டும், அடிப்படையில் ஒன்று தான்
நீ சேர்த்த அறிவு உன் மனதை விசாலமாக்கும்.
உன் தேர்வு எதுவாகினும்
அதிலே உன்னை முழுமையாய்ச் செலுத்து
வெற்றி உனதே!
மனதால் சிந்தி,
அறிவால் செய்திடு
இது எனக்கு நானே சொல்லும்
அறிவுரை அடிக்கடி!!!
- முரளிதரன்