மாயச் சாவி

நம் பண்பைத் திறக்கும்
மாயச் சாவி,
அன்னையின் அன்பு !

ஒழுக்கத்தின்
மாயச் சாவி,
தகப்பனின் கோபம் !

நம்பிக்கையின்
மாயச் சாவி,
நண்பனின் பேச்சு !

சோகம் பூட்டும்,
தெளிவைத் திறக்கும்
மாயச் சாவி,
தோழியின் சிநேகம் !

எதையும் எதிர்கொள்ளும்
தைரியத்தின் மாயச் சாவி,
உடன்பிறப்பின் பாசம் !

கவலையைப் போக்கி,
இன்பத்தின் திறவுகோல்
மழலையின் சிரிப்பு !

மங்கையின் காதல்
சுறுசுறுப்பைத் திறக்கும்,
மனைவியின் காதல்
பொறுப்பைத் திறக்கும்,
மந்திரச் சாவி !

திறமை திறக்கும் ஆசான்,
ஞானம் திறக்கும் அனுபவம் எனும் ஆசான்,
அது, ஆண்டவன் அவரவர்க்கு தந்த
விசேஷச் சாவி !

இப்படி, மனித வாழ்வில்
சாவிகள் ஆயிரம் !
திறப்பதும், துறப்பதும்
அவரவர் கையிலே !

- முரளிதரன்

எழுதியவர் : முரளிதரன் (14-Mar-22, 9:38 am)
பார்வை : 96

மேலே