பேரறி வாளர் துணிவு - ஆசாரக் கோவை 19

இன்னிசை சிந்தியல் வெண்பா

காலினீர் நீங்காமை யுண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை யேறற்க வென்பதே
பேரறி வாளர் துணிவு. 19

- ஆசாரக் கோவை

பொருளுரை:

கால்களைக் கழுவிய நீரின் ஈரம் காய்வதற்கு முன் உண்ணத் தொடங்க வேண்டும்.

கால் கழுவிய ஈரம் காய்வதற்கு முன் படுக்கையில் ஏறிப் படுக்கக் கூடாது என்பது பெரும் அறிவுடையவர் களின் அறிவார்ந்த கொள்கையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-25, 10:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே