தாரம் என்பவள்
யாரடி நீ எனக்கு?
"டா" எனும் தோழியா?
சண்டையிடும் சகோதரியா?
பாசம் கொண்ட அன்னையா?
நேசம் கொண்ட காதலியா?
இல்லை,
நான் கொஞ்ச பிறந்த
பெண் பிள்ளையா?
யாரடி நீ எனக்கு?
இவை யாவும் தருவதால்,
நீ எனக்கு "தாரமோ" !!!
- நா முரளிதரன்