காற்றே

காற்றே !!!

உன் மெட்டுக்கு
இசைந்தாடின
மரங்கள் !

உன் வார்ப்புக்கு
சிலையாகின
மேகங்கள் !

உன் வேகத்துக்கு
விலையாகின
பயிர்கள் !

உன் மௌனத்தால்
வழிந்தோடின
வியர்வைத் துளிகள் !

கோடையில் அனலாய்,
வாடையில் குளிராய்,
வதைப்பதுன் விளையாட்டு !

சுவாசமும் - மலரின்
வாசமும் தந்தாய் !
துளையில் வளைந்தோடி
வெறும் ஓசையை
இசையாய் தந்தாய் !

மலையோடு
கூட முயன்று
பின் ஊடலில்
அழுகிறாய் !
மழையாக !!

மன்னித்து விடு,
உன் ஒரு த(ம)லைக் காதல்
நிறைவேறக் கூடாது
இப்பூமி நனைய !!

காற்றே !!!
மெல்லியதாய் வீசு !!

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (21-Mar-22, 4:48 pm)
Tanglish : kaatre
பார்வை : 190

மேலே