எழுச்சி

வீழும் இடத்தில்
உன் கணத்தின் தடம் பதி,
பாறையாயினும் புறம் தள்ளு,
மெல்ல நகர் - உன்
பாதையை அகலமாக்கு,
பின், மௌனித்து நட !

வீழ்ச்சிக்குப் பின் - உன்
நீட்சியைக் கண்டு
வழி நெடுக காத்திருக்கும்
கரங்கள் இருபுறமும் !!

எழுதியவர் : நா முரளிதரன் (20-Oct-24, 9:18 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
Tanglish : ezuchi
பார்வை : 47

மேலே