வானத்தின் நீலத்தில் வெண்ணிலவு ஓர்கவிதை
வானத்தின் நீலத்தில் வெண்ணிலவு ஓர்கவிதை
வானத்தை கருமேகம் மூடினால் முகில்திரை
வானம் பொழிந்தால் வளைந்தோடும் நீரோடை
வானம் கவிந்தால் வண்ணயெழில் பொன்மாலை
-----கலிவிருத்தம் பல வாய்ப்பாட்டில்
வானத்தின் நீலத்தில் வெண்ணிலவு ஓர்கவிதை
வானத்தை கருமேகம் மூடமுகில் திரைவிரியும்
வானத்தின் பொழிவுதனில் வளைந்தோடும் நீரோடை
வானமழ கில்கவிந்தால் வண்ணயெழில் பொன்மாலை
-----கலிவிருத்தம் காய் காய் காய் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டில்
வானத்தின் நீலத்தில் வெண்ணிலவு ஓர்கவிதை
வானத்தை மேகங்கள் மூட முகில்திரை
வானம் பொழிந்தால் வளைந்தோடும் நீரோடை
வானம் கவிந்தால்மா லை
------அதே ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக