மண்ணின் துன்பம்

மண்ணின் துன்பம்

அகன்று பரந்து
விரிந்திருந்தாலும்
ஆயிரக்கணக்கான
உயிரினங்கள்
என் மேல் வசித்தாலும்
ஓராயிரம் பயிரினங்களை
உருவாக்கி கொடுத்தாலும்
மனித உயிர்களை மட்டும்
கண்டால் நடுங்கித்தான்
போகிறேன்

என் மேல் வசிக்க
அகல குழி எடுத்து
ஆகாயத்தை தொட்டு
வீடு அமைக்கிறான்
ஓராயிரம் துளைகளிட்டு
நீரை பெறுகிறான்

நானே எனக்கு
சொந்தமில்லை எனும்போது
இவனோ சொந்தம்
கொண்டாடி அடித்து
கொள்கிறான்
இவனை தவிர
எந்த உயிரனமும்
என்னை இந்த
அளவில் துன்புறுத்துவதில்லை

இருக்கும் வரை
வாழ்கின்றன
வாழ்ந்த பின்பு
மறைகின்றன

வாழ்ந்த பேரை
சொல்லி
அதற்கும் கட்டிட
சுமைகளை
என் மீது சுமத்தாமல்

கரைந்து காணாமல்
போகின்றன.
மனிதர்கள் மட்டும்…!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Oct-24, 10:51 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : mannin thunbam
பார்வை : 80

மேலே