தோழி-காதலி

தோழியே உன்னிடம்,
கலாய்த்த
விடயம் எல்லாம்
இன்று
கவிதைகளாய் தென்படுதே !

காயங்கள் ஆற்றிய
அதே கண்கள்
இன்று - என்னை
களேபரங்கள் செய்கிறதே !

ஒட்டித் திரிந்த
நாட்களெல்லாம்
நட்பைத் தவிர
தோன்றவில்லை,

விட்டு விலகிய
நொடி முதலாய் - எனக்குள்
உன்னைத் தவிர
யாருமில்லை !

மனம்
ஆனந்தம் தேடி
அனிச்சையாய் திரும்புவது
உன் திசை தானடி !

சோகம் ஆறாத
சமயங்களில்
அமைதி கொள்வதும்
உன்னிடம் தானடி !

என் வாழ்வின்
எல்லாப் பக்கங்களிலும்
முதல் வரியை
எழுதி விட்ட நீ,
கிழித்துச் சென்ற
ஒரு பக்கத்தை மட்டும்
நீட்டாமலிருக்கிறாய்
நீண்ட காலமாய் !

ஏன் ?
என்னைப் போல்
உனக்கு இன்னும்
கனவுகள்
சுமையாக மாறவில்லையா ?

நம் காதல்
பக்கத்தை நீட்டி விடு
தோழியே ! 

வேண்டாம் வேண்டாம்
இனியும் என்ன?
காதலியே !!

எழுதியவர் : நா முரளிதரன் (14-Feb-24, 8:51 am)
பார்வை : 196

மேலே