கவிதையும் கவிதாவும்
கவிதைக்கு
எதுகை இருக்கும்
கவிதாவுக்கு
இரு கை இருக்கும்
கவிதையில்
சந்தம் இருக்கும்
கவிதாவிடம்
சாந்தம் இருக்கும்
அது
கவிதை
அவளும்
கவிதைதான்
கவிதையில்
தலை வரி
இருக்கும்
கவிதா
தலை வாரி இருப்பாள்
கவிதையில்
அடி சீர் இருக்கும்
கவிதாவிடம் சீர்கேட்டால்
அடி இருக்கும்
ஆங்கிலப் பெண்ணின்
வயிற்றில் கவிதையின் பிறப்பு
அழகான பெண்ணின் வயிற்றில் கவிதாவின் பிறப்பு
கவிதையை
பா எனலாம்
கவிதாவை
பாவை எனலாம்
கவிதையை புத்தகம்
கொண்டிருக்கும்
கவிதா
புத்தான அகம் கொண்டிருப்பாள்
அதில்
மை உருவில் பொய் இருக்கும்
அவள் மெய் உருவில்
மை இருக்கும்
கவிதையின் அழகை
வெள்ளைத் தாள் சுமந்திருக்கும்
கவிதாவின் அழகை
வெள்ளைத் தோல் சுமந்திருக்கும்
வாசித்தால் சான்றிதழ்
கிடைக்கும
நேசித்தால்
சான்றாக இதழ்