பூவுலகின் பேரழகி

அழகிய தீவின் மண்
பாரதியின் பண்
நாரதியின் கண்
அந்தி நேரத்து விண்
அக்ரகாரத்தில் செய்த பன்
ராமானுஜன் காணாத எண்
நெய்வேலியில் தயாரிக்காது
நெய்யில் தயாரித்த மின்
செப்பு கலக்காத பொன்
இவள் இவை அனைத்தும்
கலந்து செய்த பெண்

யானை பயிரை சேதப்படுத்தியது போல்
இவளின் முந்தானை
என் உயிரையல்லவா சேதப்படுத்துகிறது

மானை வீட்டில் வளர்க்கும்
குற்றத்திற்காக அவள் தந்தையை
கைது செய்யாத அரசைக்
கண்டிக்காமல் கண்ணடிக்கச்
சொல்கின்றது என் மனது

அவளிடம் மயிலைப்போல்
அழகைக்காட்ட என்னிடம் இல்லை தோகை
அந்த சோகத்தால் வந்தது சோகை

அவள் வீட்டில் மூலிகைச் செடிகூட
மல்லிகையைப் பூத்தது

அவளின் கூந்தல்
காதலனும் ஒளி தரும் ராந்தல்

இவள் ரசம்தான் வைத்தாள்
ஊற்றும்போது அதிரசங்களாய்
விழுந்தன
என்ன அதிசயம்

அனைத்து மரத்தையும் சாய்த்த
கஜா புயல் இவள் வீட்டு
மரத்திடம் வரம் கேட்டு மன்றாடியது

எழுதியவர் : குமார் (28-Dec-18, 5:14 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : poovulakin peralagi
பார்வை : 595

மேலே