அழகோவியம்

நீ எனக்காக
பிறந்த புதிய சூரியன்
நான் கண்விழிக்க
உதித்த உதயசூரியன்
என் வாழ்வை ஒளியாக்க
வந்த மதிய சூரியன்
அழகில் முதிர்ந்த
முதிய சூரியன்

நீ கோவையில்
பிறந்தவள்
ஒரு கோவைக்குப்
பிறந்தவள்

உன் மீது படும்
ரணங்கள் கூட
ஆபரணங்கள் ஆகிறது

உன் கண் மையை
எடுத்து
வெற்றிலையில் தடவிப்பார்
காணாமல் போன பொருள் தெரியாது
என் இதயத்தின் இருள் தெரியும்

திரியனையில்
சுடர் அமர்ந்து ஒளி தருவதைப் போல
என் மனமெனும் அரியணையில்
நீ அமர்ந்தாய்
என் வாழ்க்கை ஒளி பெற்றது

நீ பொடி வைத்துப்
பேசும் போதெல்லாம்
என் இதயம் பொடிப் பொடியானது

நீ ஊற்று நீர்
நான் ஆற்றுநீர்
நம் காதல்
கானல் எனும் வேற்று நீர்

கிழிந்த என் இதயத்தை
நெய்த
நெய்தல் நீ
பால் ஆடை அணியாது
மேலாடை அணிந்த
நெய் நீ

மது
கால் இருப்பதால்
நீ மாது

உன்னை வெயிலுக்குக் காட்டாமல் வளர்த்தார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக மயிலுக்கு காட்டித்தான் வளர்த்திருப்பார்கள்.

உன்னைப் பார்த்த ஆண்கள் அனைவரும் பிணவறையில்
நீ பார்த்த ஒருவன் மட்டும்
மணவறையில் ...

எழுதியவர் : Kumar (8-Jun-21, 11:42 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 200

மேலே