நட்பா காதலா
நட்பிற்கு இலக்கணமாம்
நட்பதிகாரம்
படித்ததோடு நிறைவடைந்திருந்தால்
பிழைத்திருப்பேன் போலும்
படைக்க அல்லவா யத்தனித்தேன்
(உனக்காக)
உள்ளிருந்த ஆவல் உந்தியது
கவிதையொன்று சித்தரிக்க
வார்த்தை சஞ்சரிக்க மறுத்து
முரண்டு பிடித்தது
யோசனையில் தளர்வுற்றவளாய்
தானாக கண்களை நித்திரை சூழக்கொண்டேன்
தீனமான குரலொன்று அழைத்தது
பதைபதைப்புடன் நோக்க வேண்டாம்
உண்மையை உரக்க சொல்லும்
திராணியற்று
ஊனமாகி உளறிக்கொண்டிருக்கும்
என் மனம்
உணரச்செய்தது
இருதயத்தை துளைத்துக்கொண்டு
ஊடுருவியிருப்பது
காதல் என்று...
- Saishree.R