நீளும் இரவு நீளமாய் கழிகிறது

ஒற்றை நிலவு!
ஒருவனாய் நான்!
நீல வானம் நீள்கிறது!
நீளும் இரவு நீளமாய் கழிகிறது நினைவெல்லாம் நீயே வருகிறாய்!
கண்முடி நித்திரை கொள்ள பிடிக்கவில்லை!
கனவுகளில் உந்தன் நிழல் வந்து கவிதை சொல்லி போகிறது!
நொடிக்கு நூறு முறை உன் பெயரை மட்டும் சொல்லி துடிக்குது என் இதயம்!
இமைகள் மூடாமல் இதயசுவற்றில் உன் படத்தை பார்த்து ரசிக்கிறது!
உன் இதழின் ரேகைகளை எண்ணி என் ஆயுளை தீர்மானிக்கிறது!
உன் கூந்தல் வாசத்தை சுவாசிக்க என் ஜீவன் ஏங்குகிறது!
இந்த எண்ணங்களில் கழிந்திடும் இன்றிரவு!
எதிர்வரும் நாளில் காத்திருப்பேன் கையில் பூங்கொத்துடன் பேருந்து நிறுத்தத்தில்!

எழுதியவர் : சுதாவி (8-Jun-21, 10:08 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 316

மேலே