காதல் விழி அம்பு பட்டு
மௌன மொழி பேசும் விழிகள் என் காதோரம் சொல்லி போனதேனோ!
விழி முடும் வேளையில் விரியுது உன் பிம்பம்!
பனி விழும் இரவிலும் பார்த்திருப்பேன் உன் புகைபடத்தை!
புகைக்க மறந்த தொடர்வண்டியாய் தொடருது உன் எண்ணங்கள்!
உதிக்க தயங்கும் கதிராய் உந்தன் நினைவுகள்!
உன் இதயகூட்டில் அடைபட்டு போனேன்!
கண்ணியே
உன் காதல் விழி அம்பு பட்டு!