Saishree R - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Saishree R |
இடம் | : கூடுவாஞ்சேரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 224 |
புள்ளி | : 23 |
நீ என் போதை கண்ணம்மா
உச்சரித்த வேளை
உணரவில்லை
அதன் உண்மை நிலையை
"ஒரு மனிதன் பிற மனிதனுக்கு
அடிமையாகக்கூடும்"
கேள்விபட்டிராத நோய்
என்னை பீடித்து வதைக்கிறது
சுயத்தை இழக்கின்றேன்
நிலைகுலைந்துவிட்டபடியால்
காயப்பட்ட புழுவாய்
துடித்துத்தான் போகிறேன்
அளவற்ற நேசத்தை
பொழிந்த உன்னிடத்து
என்பால் வெறுப்புதனை
தோற்றுவிக்க நேர்ந்ததால்
நீ விரும்பும் இடைவெளி
இன்றியமையாத ஒன்றானது
எனக்கு
விளகி நிற்கின்றேன்
இந்த சார்தல் நிலையை
கடந்த புரிதலை
என் காதல் அடையும்
என்னை நானே மீட்டெடுப்பேன்
என்ற நம்பிக்கையுடன்
-Saishree.R
என் எண்ணங்கள் பருந்தாய்
எப்பொழுதும் உன் நினைவுகளை
வட்டமிட்ட பொழுதும்
"நீ என்னை பிரிந்தால் என்ன ஆவேனோ "
என்ற எண்ணம் தான்
தேங்காய் கீற்று அளவில் இருந்தும்
நெஞ்சை சிராய்துவிட்டுச் செல்கிறது
நீ நெருங்கும் வேளையில்
அதனாலோ என்னவோ
ஒவ்வொரு முறை நீ என்னிடம்
'விடைகொடு' என்று கேட்கையில்
மறுத்துச் சொல்ல தூண்டுகிறது
வினாடியில் மனம் துவண்டுபோகுது
உன்னை அரவணைத்துக்கொள்ள
துடிக்கிறது
அனுமானித்துப் பார்க்கையில்
என்னைக் காட்டிலும்
என்னை ஆழமாய் நேசிக்கும்
உன்னிடத்தில் அந்நொடியில் வெளிப்படும்
கொஞ்சல் மொழியும்
வெளிப்படுத்த இயலாத ஏக்கத்தின் கனமும்
விட்டுச்செல்கிறது என்னுள்
அம்மா வைத்த சூடு பதித்தது
ஆறாத வடுவினை
அவள் மனதளவில் .......
கைகள் நடுங்கின
நெஞ்சு படபடத்தது
பேச்சு திணறிற்று இன்றளவும் அவள் மேடையேறிய பொழுதில்,
அந்த அன்னைக்கு
கணவன் மீதிருந்த கோபம்
திசைதிரும்பிற்று போலும்
தன் பிள்ளையை
அடித்துத் தீர்த்தவராய்,
செய்த தவறு இன்னது
என்று அறியாது
விக்கி அழுதது
அவள் பச்சிளம் நெஞ்சம் அன்று
மாமன் அவன் தன் பாலியல் சீண்டல்களால்
அவன் வண்டி வரும் அரவம் கேட்டு
மிரண்டு நின்றாள்
அவன் வக்கிரப் பார்வையிலிருந்து சற்றே மறைந்து
ஒடுங்கி நின்றாள்
செய்வதறியா சிறுமியாய்
நிகழ்வது புரியா அவலையாய்
குழந்தை பருவத்து பாதிப்பாய்
இன்னமும்
தன்னுயிரை
ஆச்சரியப்பட்டுத்தான் போனேன் மலமலவென்று மடைதிறந்தாற்போல் கொட்டும்
பேனா முனையும் வியர்த்திடவே
சொரிந்த வார்த்தை வரிகள்
உன்னை நினைத்த பொழுதில்
இன்று கனத்த மௌனத்தை
பரிசளித்தமையால்
என்ன ஆயிற்று
ஆழ்மனம் அமைதியாய் அசைபோட்டது
சன்னப் பொழுதில்
நகையொன்று தவழ்ந்தது இதழோரம்
மனநிறைவொன்று வெகுவாக
படர்ந்திருந்ததை அறியப்பெற்றேன்
காரணம்:
ஏக்கம்,கோபம்,தவிப்பு,தாபம்
என்று ......
ஏனைய கவிதை உருவங்கொண்ட
என் எண்ணங்கள்
இன்று உன் கனிவின் நயங்கண்டு
அன்பின் ஆழங்கண்டு
மண்டியிட்டு நின்றபடியால்
ஒப்படைத்தேன் முழுமையாய் உன்னிடத்தில்
என்னையும்
என் வார்த்தைகளையும் ஒருசேர
மௌனமான உன் புரிதலில
பாட்டில்கள் அடுக்கடுக்காய்
குவிந்தபடி
விசும்பலில் குடும்பங்கள் உருகுலைந்தபடி
உற்றார் உறவினர் இழிந்தபடி
வீதிநடையெடுத்தனர் தள்ளாடியபடி
மது குடுவையில் தஞ்சம்
கொண்டாடியபடி
மதியிழந்து மதிப்பிழந்து நலிவுற்று
வலுவிழந்து தெருமுனையில் வீழ்ந்தபடி
மக்கட்கு மனையாளும் அனுதினமும்
பதைத்துத் தேடி அலைந்தபடி
திருந்தவே கெஞ்சிடும் நெஞ்சங்கள்
தளர்வுற்றபடி
விடாத மது அரக்கன் கையமர்த்தியபடி
சொந்தங்கள் அனாதயாகி நிற்பதை வெறித்தபடி
ஏறிச்சென்றான் பாடையில் பயனித்தபடி
- Saishree. R
***************************************************************************
உண்மைதனை உரைத்திடுவாய்
உள்ளதை உள்ளபடிக் காட்டிடுவாய்
என்று நம்பித்தானே
உன் முன்னால் வந்து நின்றோம்
ஆனால்..
நீ செய்திடும் வேலைகளோ
அந்த சூனியக்காரியின்
மாயக்கண்ணாடியையும் விஞ்சி நிற்கிறதே!...
அன்பும் அழகும் அறிவும்
ஒருங்கே கொண்ட பெண்ணொருத்தி
அலங்கரித்து உன்முன் வந்தால்
அன்பையும் அறிவையும் கபளீகரம் செய்துகொண்டு
தான்தான் பேரழகு என்னும் கர்வத்தை
அவளுக்கு நீ பரிசளிக்கின்றாய்.
தகுமா இது?
சிவந்த மேனிதான் உயர்வு அழகு
என்பது போன்ற ஒரு படிமத்தை
உன்முன் நிற்போருக்குள் ஏற்படுத்திவிடுகின்றாய்..
விளைவு..
கருப்புகள