உன்னை சார்ந்து

நீ என் போதை கண்ணம்மா
உச்சரித்த வேளை
உணரவில்லை
அதன் உண்மை நிலையை

"ஒரு மனிதன் பிற மனிதனுக்கு
அடிமையாகக்கூடும்"
கேள்விபட்டிராத நோய்
என்னை பீடித்து வதைக்கிறது
சுயத்தை இழக்கின்றேன்
நிலைகுலைந்துவிட்டபடியால்

காயப்பட்ட புழுவாய்
துடித்துத்தான் போகிறேன்
அளவற்ற நேசத்தை
பொழிந்த உன்னிடத்து
என்பால் வெறுப்புதனை
தோற்றுவிக்க நேர்ந்ததால்
நீ விரும்பும் இடைவெளி
இன்றியமையாத ஒன்றானது
எனக்கு

விளகி நிற்கின்றேன்
இந்த சார்தல் நிலையை
கடந்த புரிதலை
என் காதல் அடையும்
என்னை நானே மீட்டெடுப்பேன்
என்ற நம்பிக்கையுடன்

-Saishree.R

எழுதியவர் : Saishree. R (8-Apr-23, 8:49 am)
சேர்த்தது : Saishree R
Tanglish : unnai saarnthu
பார்வை : 105

மேலே