என்னவனே

என் எண்ணங்கள் பருந்தாய்
எப்பொழுதும் உன் நினைவுகளை
வட்டமிட்ட பொழுதும்
"நீ என்னை பிரிந்தால் என்ன ஆவேனோ "
என்ற எண்ணம் தான்
தேங்காய் கீற்று அளவில் இருந்தும்
நெஞ்சை சிராய்துவிட்டுச் செல்கிறது
நீ நெருங்கும் வேளையில்

அதனாலோ என்னவோ
ஒவ்வொரு முறை நீ என்னிடம்
'விடைகொடு' என்று கேட்கையில்
மறுத்துச் சொல்ல தூண்டுகிறது
வினாடியில் மனம் துவண்டுபோகுது
உன்னை அரவணைத்துக்கொள்ள
துடிக்கிறது

அனுமானித்துப் பார்க்கையில்
என்னைக் காட்டிலும்
என்னை ஆழமாய் நேசிக்கும்
உன்னிடத்தில் அந்நொடியில் வெளிப்படும்
கொஞ்சல் மொழியும்
வெளிப்படுத்த இயலாத ஏக்கத்தின் கனமும்
விட்டுச்செல்கிறது என்னுள்
நான் இதுவரை பெற்றிராத
துணிச்சலை

ஆயினும் ,
இன்னும் சற்று நேரம்
என் பயத்தை மறைக்க முயற்சித்து ,
தோற்று
பின் வெளிப்படுத்துகையில் ....
துவண்டுப் போகிறாய்
என் நம்பிக்கையின்மை
உன்னை கிழித்தெறிகிறது
உயிரோடு மாண்டவனாய்
துடித்து அழுகிறாய்
தாளாத வலியொன்று
என்னை துளைத்தெடுத்தது
நீ மௌனமாய் உருகுலைவதனை கண்டு

அந்தஷணம் தூக்கிலிட்டேன்
வாழத்தகுதியற்றபடியால்
என்னைப் பற்றியிருந்த பயத்தை
முற்றிலுமாய்.

-Saishree.R

எழுதியவர் : Saishree. R (18-Dec-22, 9:23 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : ennavane
பார்வை : 228

மேலே