தழும்பு

அம்மா வைத்த சூடு பதித்தது
ஆறாத வடுவினை
அவள் மனதளவில் .......

கைகள் நடுங்கின
நெஞ்சு படபடத்தது
பேச்சு திணறிற்று இன்றளவும் அவள் மேடையேறிய பொழுதில்,
அந்த அன்னைக்கு
கணவன் மீதிருந்த கோபம்
திசைதிரும்பிற்று போலும்
தன் பிள்ளையை
அடித்துத் தீர்த்தவராய்,
செய்த தவறு இன்னது
என்று அறியாது
விக்கி அழுதது
அவள் பச்சிளம் நெஞ்சம் அன்று

மாமன் அவன் தன் பாலியல் சீண்டல்களால்
அவன் வண்டி வரும் அரவம் கேட்டு
மிரண்டு நின்றாள்
அவன் வக்கிரப் பார்வையிலிருந்து சற்றே மறைந்து
ஒடுங்கி நின்றாள்
செய்வதறியா சிறுமியாய்
நிகழ்வது புரியா அவலையாய்

குழந்தை பருவத்து பாதிப்பாய்
இன்னமும்
தன்னுயிரை மாய்த்துக்கொள்ள
அவ்வப்போது முயலும்
என் தோழியை
எங்ஙனம் மீட்பேனோ .....

நீங்கள் விட்டுச்சென்றது
கறையல்லவே துடைத்தெறிய
ஆறாத தழும்பல்லவா
- Saishree.R

(Nearly 3 in 4 children-or 300 million children-aged 2-4 years regularly suffer physical and/or psychological voilence at the hands of parents and caregivers
One in 5 women report having been sexually abused as a child aged 0-17 years)

Child abuse - a scar while growing, major cause for mental illness among adults

எழுதியவர் : Saishree. R (26-Oct-22, 12:04 am)
சேர்த்தது : Saishree R
பார்வை : 63

மேலே