காதலின் பரிமாணம்

ஆச்சரியப்பட்டுத்தான் போனேன் மலமலவென்று மடைதிறந்தாற்போல் கொட்டும்
பேனா முனையும் வியர்த்திடவே
சொரிந்த வார்த்தை வரிகள்
உன்னை நினைத்த பொழுதில்
இன்று கனத்த மௌனத்தை
பரிசளித்தமையால்

என்ன ஆயிற்று
ஆழ்மனம் அமைதியாய் அசைபோட்டது
சன்னப் பொழுதில்
நகையொன்று தவழ்ந்தது இதழோரம்
மனநிறைவொன்று வெகுவாக
படர்ந்திருந்ததை அறியப்பெற்றேன்

காரணம்:
ஏக்கம்,கோபம்,தவிப்பு,தாபம்
என்று ......
ஏனைய கவிதை உருவங்கொண்ட
என் எண்ணங்கள்
இன்று உன் கனிவின் நயங்கண்டு
அன்பின் ஆழங்கண்டு
மண்டியிட்டு நின்றபடியால்
ஒப்படைத்தேன் முழுமையாய் உன்னிடத்தில்
என்னையும்
என் வார்த்தைகளையும் ஒருசேர
மௌனமான உன் புரிதலில்
திளைத்தவளாய்
வார்த்தையற்ற சம்பாஷணைகள்
இதயத்தின் கவிதைகளாம்
.....
இது காதலின் மற்றுமொரு பரிணாமம்
- SaishreeR

எழுதியவர் : Saishree. R (25-Oct-22, 9:31 pm)
சேர்த்தது : Saishree R
பார்வை : 161

மேலே