ஒன்றுக்குப் பல
ஒரு கேள்வி பல பதில்கள்...
ஒரு சொல் பல கவிதைகள்...
ஒரு பிரச்சினை பல தீர்வுகள்...
ஒரு நிகழ்வு பல விமர்சனங்கள்...
ஒரு ஆராய்ச்சி பல முடிவுகள்...
ஒன்றுக்குப் பல
மறைந்திருக்கும் காரணம் என்னவோ?
சிந்தனைகள் சிறகடித்திட
விடை காணும் ஆவலில்
குதூகலிக்கிறது மனம்...
ஒன்றை ஆராய பல மனிதர்கள்...
நிறத்திலே வேறுபட்டவன்...
குணத்திலே மாறுபட்டவன்...
எண்ணங்களிலே பலதரப்பட்டவன்...
ஒன்றுக்குப் பல
காரணம் புரிகிறதா???
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா